Tuesday, August 31, 2010

♥♥♥பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே♥♥♥

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ....


இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே


வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே


வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி வலிகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே


இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே...


எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே


யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
நிலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....


No comments:

Post a Comment